இங்கு நபியவர்கள், மறுமையில் சுவனம் படைப்புக்களின் தலையில் இருந்து ஒரு 'மீல்' அளவு நெருக்கமாக இருக்கும் அளவு நெருக்கமாக்கி வைக்கப்படும் என்று அறிவிக்கின்றார்கள். ஸுலைம் இப்னு ஆமிர் எனப்படும் தாபிஈ அவர்கள் கூறுகின்றார்கள் : மீல் என்பதன் மூலம் நாடப்படுவது, நில அளவீடுகளில் ஒன்றான மைலா? அல்லது கண்ணுக்கு சுர்மா இடப் பயன்படும் குச்சியான மீலா? என்பதை நான் அறியமாட்டேன்! நபியவர்கள் தொடர்ந்து கூறினார்கள் : மக்கள் தமது செயற்களுக்கு ஏற்ப வியர்வையில் இருப்பார்கள். சிலரது வியர்வை கணுக்கால்கள் வரை இருக்கும். சிலரது வியர்வை முழங்கால்கள் வரை இருக்கும். சிலரது வியர்வை வேட்டிகளைக் காட்டும் இடமான இடுப்பு வரை இருக்கும். சிலரது வியர்வை அவரது வாய் வரை வந்து அவரைப் பேசாவிடாமல் தடுக்கும். இவ்வாறு கூறிவிட்டு நபிவர்கள் தமது வாய் நோக்கி சைகினை செய்து காட்டினார்கள்