நபித் தோழர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஓர் இரவில் - பதினான்காம் இரவில்- இருக்கும் போது சந்திரனைப் பார்த்து: நிச்சயமாக முஃமின்கள் தமது வெற்றுக் கண்களால் எவ்விதத் தடையுமின்றி தெளிவாக தங்களது இரட்சகனை காண்பார்கள் என்றார்கள். மேலும் அவர்கள் தங்களது இரட்சகனை பார்ப்பதில் நெரிசல்களுக்கு உள்ளாக மாட்டார்கள், அவனை காண்பதில் அவர்களுக்கு எவ்வித களைப்போ சிரமமோ ஏற்படாது எனவும் குறிப்பிட்டார்கள'; பின்னர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள் : பஜ்ர் மற்றும் அஸ்ர் தொழுகைகளை விட்டும் உங்களை திசைதிருப்பக் கூடிய விடயங்களை விட்டும் தவிர்த்து இதனை செய்ய முடியுமென்றால் இந்த இரு தொழுகைகளையும் பூரணமாக அதற்குரிய நேரத்தில் கூட்டாக- ஜமாஅத்தாக தொழுது வாருங்கள்;.அவ்வாறு நீங்கள் தொழுது வருவது அல்லாஹ்வின் திருமுகத்தை மறுமையில் காண்பதற்கான வழிகளில் ஒன்றாக அமைந்து விடும். இவ்வாறு கூறிவிட்டு பின்வரும் வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள் : "சூரிய உதயத்திற்கு முன்னும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னும் உனது இரட்சகனை புகழ்வதின் மூலம் துதிசெய்வீராக".