நபி ஸல்லலல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை பற்றியும் அல்லாஹ் அடியார்களுக்குச்செய்ய வேண்டிய கடமை குறித்தும் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள். அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யவேண்டிய கடமை என்னவென்றால், அவர்கள் அவனையே வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது. அல்லாஹ் அடியார்களுக்கு செய்ய வேண்டிய -உரிமை –கடமை யாதெனில், அவனுக்கு எதையும் இணை கற்பிக்காமல் இருக்கும் ஏகத்துவவாதிகளை (மறுமையில்) அவன் வேதனை செய்யாமல் இருப்பதாகும். பின்னர் முஆத் அவர்கள் நபியவர்களை விளித்து அல்லாஹ்வின் தூதரே இந்தச் சிறப்பை அறிந்து மக்கள் மகிழ்ச்சியடைவதற்காக நான் அவர்களுக்கு இதனை அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள். அப்போது நபியவர்கள் இதில் அவர்கள் (அடியார்கள்) நற்காரியங்களில் ஈடுபடாது இந்த விடயத்திலே உறுதியாக இருந்துவிடுவார்கள் என்ற அச்சத்தினால் இதனை மக்களிடம் கூறுவதை தடுத்தார்கள்.