இந்த வசனத்தில் நூஹ் (அலை) அவர்களின் சமூகம் தொடர்ந்து வணங்க வேண்டும் என தமக்கிடையே உபதேசித்துக் கொண்ட அந்த கடவுள்களெல்லாம் அடிப்படையில் அக்காலத்தில் அவர்களுடன் வாழ்ந்த நல்லடியார்களின் பெயர்களாகும். ஷைத்தானின் வசப்படுத்தல் காரணமாக அவர்கள் இவ் நல்லடியார்கள் விடயத்தில் அளவு கடந்து சென்று அவர்களுடைய உருவங்களை நட்டு, இறுதியில் அல்லாஹ் அல்லாமல் வணங்கப்படும் சிலைகளாக இவை மாறிவிட்டதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள்.