நபித்தோழர்களில் ஒருவர் அவரின் இம்மை மறுமைக்கு பயனளிக்கும் ஒரு விடயத்தை காட்டித்தருமாறு நபியவர்களிடம் வேண்டினார். அதற்கு நபியவர்கள் கோபம் கொள்ள வேண்டாம் என அறிவுரைக் கூறி கட்டளை பிரப்பித்தாரகள். இதன் கருத்து, கோபத்தை தூண்டக் கூடிய காரணிகளை தவிர்ந்திருத்தல், கோபம் ஏற்பட்டால் மனதை அடக்கி அடக்கமாக இருத்தல், கோபத்தின் காரணமாக அத்துமீறி கொலை அல்லது தாக்குதல் அல்லது ஏசுதல் போன்ற விடயங்களில் ஈடுபடாமல் இருத்தல் போன்றவற்றை குறிக்கும். நபியவர்களிடம் வந்த மனிதர் பல தடவைகள் தனக்கு உபதேசம் செயயுமாறு வேண்டிக்ககொண்டாலும்; நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'கோபம் கொள்ளாதீர்' என்ற வார்த்தையை தவிர மேலதிகமாக எதனையும் கூறவில்லை.