ஹதீஸ் விளக்கம்:நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன். ஆகையால் எல்லா கருமங்களும் மென்மையாக நடை பெறுவதையே அவன் விரும்புகிறான்.மேலும் தன் அடியார்களில் யார் மிருதுவான பண்புடையவராக அழகிய முறையில் ,மக்களுடன் தொடர்புகளை வைத்துக் கொள்கின்றவராக இருக்கின்றாரோ அவரை அவன் நேசிப்பான்.மேலும் வன்மையும்,கடினமும் உடையேராருக்கு வழங்காத கூலியினை மென்மையான பண்புடையோருக்கு அல்லாஹ் வழங்குவான்.மேலும் எல்லா விடயத்திலும் அவன் மிருதுவானவனாக இருக்கின்ற படியால் அது அவனுக்கு மிகவும் விருப்பமானதோர் மகத்தான பண்பாகும்,எனவே இப் பண்பு எப்பொழுதும் ஒரு முஸ்லிமிடம் இருத்தல் வேண்டும்.