ஒருவர் மரணித்துவிட்டால் அவரின் செயல்களும் நின்றுவிடும். என்றாலும் அவரின் மரணத்தின் பின் மூன்று செயல்கள் மூலம் மாத்திரமே அவருக்கு நன்மைகள் கிடைக்கும். ஏனெனில் அச்செயல்களுக்கு அவரே காரணமாக இருந்திருக்கிறார். அவைகள் வருமாறு : முதலாவது : அல்லாஹ்வின் பாதையில் எதையாவது அர்ப்பணித்தல், (வக்ப் செய்தல்) பள்ளிவாசல்கள் கட்டுதல், கிணறுகள் தோண்டுதல் போன்ற தொடர்ச்சியான வெகுமதியையும் நிரந்தரமான நன்மையையும் பெற்றுத் தரும் தர்மம். இரண்டாவது: மக்களுக்கு பயனளிக்கும் அறிவு. இதில் புத்தகங்களை எழுதுதல் மற்றும் கற்பித்தல் போன்றன அடங்கும். ஒருவர் மற்றொருவருக்கு அறிவைப் புகட்டி, அந்த நபர் தனக்கு கற்பித்தவரின் மரணத்திற்குப் பிறகு அதை மற்றவர்களுக்கு கற்பித்தால் பரப்பினால் அக்கூலி மரணித்தவருக்கு வந்து சேரும். மூன்றாவது: தனது பெற்றோருக்காகப் பிரார்த்தனை செய்யும் இறைவிசுவாசமும் நல்லொழுக்கமும் நிறைந்த குழந்தை.