ஸஃத் இப்னு உபாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தாயார் இறந்தபோது, ஸஃத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் தனது தாய்க்கு வழங்கக்கூடிய சிறந்த தர்மம் எது என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தண்ணீர் கொடுப்பதே சிறந்த தர்மம் என்று பதிலளித்தார்கள். அவர் தனது தாய்க்காக ஒரு கிணற்றைத் தோண்டி அதனை தர்மமாக வழங்கினார்கள்.