நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தன்னை யமனுக்கு அனுப்பினார்கள் என அபூமூஸா அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்போது அங்கே சில பானங்கள் தயாரிக்கப்படுவதாகுவும், அதை அருந்துவது தடைசெய்யப்பட்டதா என நபியவர்களிடத்தில் வினவ நபியவர்கள் அந்த பானம் பற்றி விவரிக்குமாறு அவரை வேண்டிக் கொண்டார்கள். அப்போது அபூமூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அங்கே ';பித்உ' மற்றும் 'மிஸ்ர்'; எனும் இரண்டு வகையான பானங்கள்; உண்டு. பித்ஃ என்பது தேனினால் தயாரிக்கப்படும் மதுசாரம், மிஸ்ர் என்பது வாற்கோதுமையினால் தயாரிக்கப்படும் மதுசாரம் என்று கூறினார்கள். உடனே சொற்சுருக்கமும் பொருட்செரிவும் வழங்கப்பட்ட நபியவர்கள் : போதை தரும் அனைத்தும் தடைசெய்யப்பட்டதாகும் என்று மிகவும் சுருக்கமாக பதிலளித்தார்கள்.