மூளைத்திறனை மயக்கி அதன் செயற்பாட்டை செயலிழக்கச்செய்யும் அனைத்தும் போதையூட்டும் மதுபானம் ஆகும். அது பருகுதுதல் அல்லது சாப்பிடுதல் அல்லது உரிஞ்சுதல் அல்லது வேறு ஏதாவது வழிமுறைகளில் காணப்பட்டாலும் சரியே. மூளைத்திறனை மயக்கி அதன் செயற்பாட்டை செயலிழக்கச்செய்யும் அனைத்தையும் அது சிறிய அளவில் பெரிய அளவில் இருந்தாலும் அல்லாஹ் அதனை ஹராமாக்கி தடைசெய்துள்ளான். மேற்குறிப்பிடப்பட்ட போதைப்பொருட்களின் வகைகளில் ஒன்றை ஒருவர் தொடராக குடித்து, தௌபா –பாவமன்னிப்புக்- கேட்காது மரணித்து விட்டால், மறுமையில் அல்லாஹ்வின் தண்டனைக்கு உட்படுவார். அவருக்கு மறுமையில் கிடைக்கும் தண்டனை சுவர்க்கத்து மதுவை அருந்துவதற்கான பாக்கியத்தை இழப்பதாகும்.