அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது, அவர்கள், அவர்களது தாயின் கணவராகிய, அபூ தல்ஹாவின் வீட்டில் மக்களுக்கு (மது) புகட்டுபவனாக இருந்துள்ளார்கள். அந்நாட்களில் அவர்களது மதுபானம் என்பது, 'பழீக்' எனப்படும் (ஈத்தம் பழத்தால் செய்யப்படும்) மதுவாக இருந்தது. அப்போது நபியவர்கள் ஓர் அழைப்பாளியை ஏவி, 'நிச்சயமாக மதுபானம் தடுக்கப்பட்டுவிட்டது.' என்று அறிவிக்கச் செய்தார்கள். அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : அப்போது அபூ தல்ஹா என்னிடம், 'வெளியே சென்று, இதைக் கொட்டிவிடு' என்று கூறினார்கள். நானும் வெளியேறி அதைக் கொட்டினேன். அது மதீனாவின் பாதைகளில் ஓடியது. அப்போது மக்களில் சிலர், 'சில மனிதர்கள், மது தம்முடைய வயிற்றில் இருக்கும் போதே கொல்லப்பட்டுள்ளனரே' என்று கூறிய போது, "ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப் பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டு, ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது. (அல் மாஇதா : 93) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கினான். அதாவது, விசுவாசம் கொணடவர்கள், மதுபானம் தடை செய்யப்படுவதற்கு முன்னர் அருந்திய, சாப்பிட்ட விடயங்களில் அவர்களுக்கு எந்தக் குற்றமும் கிடையாது.