நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தஜ்ஜாலின் குணவியல்புகள் மற்றும் அவனின் அடையாளங்கள் பற்றி இதற்கு முன் எந்த நபியும் கூறாத பல விடயங்களை தனது தோழர்களுக்கு குறிப்பிட்டார்கள் அவற்றில் சில பின்வருமாறு : அவன் ஒற்றைக் கண்ணுடையவன். கண்ணின் பார்வைக்குட்டபட்டதாக சுவர்க்கத்தையும் நரகத்தையும் அல்லாஹ் அவனிடம் கொடுத்திருப்பான். என்றாலும் அவனிடமிருக்கும் சுவர்க்கம் நரகமாகவும் நரகம் சுவர்க்கமாகவும் இருக்கும். யார் அவனுக்குக் கட்டுப்படுகின்றானோ அவனை மக்கள் சுவர்க்கம் எனக்கருதுகின்ற அந்த சுவர்க்கத்தில் நுழைவிப்பான். ஆனால் அது சுட்டெரிக்கும் நெருப்பாக இருக்கும். யார் அவனுக்குக் கட்டுப்படவில்லையோ அவனை மக்கள் நரகம் எனக்கருதுகின்ற அந்த நரகத்தில் அவன் நுழைவிப்பான். என்றாலும் அது உண்மையான அழகிய இன்பமான சுவர்க்கமாக இருக்கும். பின்னர் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நூஹ் அலை அவர்கள் தனது சமூகத்தை எச்சரித்தது போன்று தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் எங்களை எச்சரித்தார்கள்.