நபி ﷺ அவர்கள், இம்மை மறுமை நலன்களை உள்ளடக்கிய சொற்சுருக்கமும் பொருட்செரிவுமிக்க துஆக்களை விரும்பி ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். அந்த துஆக்கள் அல்லாஹ்வை புகழ்வதையும், நல்ல குறிக்கோள்களையும் உள்ளடக்கியதாக இருந்தன. இதற்கு மாறானவற்றை விட்டுவிடுவார்கள்.