அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஸல்மான் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: 'நிச்சயமாக அல்லாஹ் மிக வெட்கமுள்ளவன், தயாள குணம் படைத்தவன், தனது அடியான் தன்னிடம் பிரார்திப்பதற்காக உயர்த்திய கைகளை பதிலளிக்காது வெறுமையாக திருப்பி விடுவதை யிட்டும் வெட்கப்படுகிறான்'. நம்பகமானது (ஹஸன்) - இதனை இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜஹ் ஆகியோர் பதிவு செய்துள்ளனர்
explain-icon

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், துஆ செய்யும் போது கைகளை உயர்த்த வேண்டும் என்று ஊக்குவித்ததுள்ளதோடு, அல்லாஹ் மிகுந்த வெட்கம் உடையவனும் (ஹயீ), மிகுந்த தயாளனும் (கரீம்) ஆவான் என்று நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். அல்லாஹ், அடியாருக்கு மகிழ்ச்சி தருவதைச் செய்கிறான். அவனுத் தீங்கு விளைவிப்பவற்றை விலக்குகிறான். அவன், கேட்காமலேயே வழங்குபவன். அப்படியானால், கேட்டு துஆ செய்த போது எவ்வளவு அதிகமாக வழங்குவான் என்பதை நாம் எண்ணிக் கொள்ளலாம். ஒரு இறைவிசுவாசி துஆ செய்வதற்காக தன் கைகளை உயர்த்தும் போது, அந்தக் கைகளை வெறுமையாகவும், பதில் இல்லாமலும் திருப்பி அனுப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான். அதனால், அடியாரின் துஆவை ஏற்றுக்கொண்டு, அவனுக்கு நன்மை வழங்குகிறான்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • மனிதன் அல்லாஹ்விடத்தில்; தனது தேவைகளை முன்வைத்து பக்தியை எவ்வளவு அதிகமாக வெளிப்படுத்துகிறானோ, அவ்வளவு அதிகமாக அவனது துஆ ஏற்கப்படும் என்ற நம்பிக்கை அதிகரிக்கிறது மேலும் அது ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும்.
  • துஆ செய்ய ஊக்குவித்தல், அதில் கைகளை உயர்த்துவது விரும்பத்தக்கது என்பதையும், மேலும் கைகளை உயர்த்திக் கேட்பதானது துஆ ஏற்கப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக இருப்பதையும் இந்த ஹதீஸ் விளக்குகிறது.
  • அல்லாஹ் தனது அடியார்கள் மீதான கருணையையும், அவனது அருளின் பரந்த தன்மையும் விளக்குகிறது.
explain-icon

மேலதிக விபரங்களுக்கு