நபி ﷺ அவர்கள், துஆவை (பிரார்த்தனையை) ஏதோ ஒரு விடயத்தை நிபந்தனையுடன் இணைத்துக் கேட்பதை தடைசெய்தார்கள். அது 'அல்லாஹ் விரும்பினால்' என்ற நிபந்தனையாக இருந்தாலும் சரியே!. ஏனெனில், அல்லாஹ் விரும்பினாலேயே மன்னிப்பை அளிப்பான் என்பது உறுதியான, சந்தேகமற்ற உண்மை. ஆகவே, அவனுடைய விருப்பத்தை நிபந்தனையாகக் கூறுவதற்கு எந்த அர்த்தமும் இல்லை. இவ்வாறு நிபந்தனை விதிப்பது, கட்டாயப்படுத்தப்பட்ட நிலையில் செயல்படக் கூடியவர்களிடம் மட்டுமே பொருந்தும்; ஆனால் அல்லாஹ் அதுபோன்ற எந்தக் குறையிலிருந்தும் உயர்ந்தவன். இதை நபி ﷺ அவர்கள் ஹதீஸின் இறுதியில் 'அவனை யாரும் (நிர்ப்பந்திக்க முடியாது) கட்டாயப்படுத்த முடியாது' என்று தெளிவுபடுத்தினார்கள். அதேபோல், அல்லாஹ் எதையும் கொடுப்பதென்பது அவனுக்கு பெரிதாவோ, கடினமானதாகவோ ஆகமாட்டது. அவன் இயலாதவன் அல்ல. ஆகவே, 'நீ விரும்பினால்' என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. துஆவை அவனுடைய விருப்பத்துடன் இணைப்பது, அவனுடைய மன்னிப்பைத் தேவையற்றது போல் கருதுவதன் ஒரு வகையாகும். 'நீ விரும்பினால் எனக்கு இதைத்தா' என்று சொல்லுவது, பொதுவாக அவன் தேவையற்றதாகவோ அல்லது இயலாதவரிடமோ மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால் முழுமையான ஆற்றல் உடையவரிடமும், அவசியமாகத் தேவைப்படும் போதும், ஒருவர் தன்னுடைய வேண்டுகோளை உறுதியாகக் கேட்க வேண்டும். அவன் கேட்டதை மிக அவசியமாகத் தேவைப்படும் ஏழைபோல், முழுமையாக அல்லாஹ்வின் மீது சார்ந்து கேட்க வேண்டும். ஏனெனில், அல்லாஹ் தான் எவ்விதத் தேவையுமற்றவன் நிறைவானவன் அனைத்திற்கும் ஆற்றல் உடையவன்.