ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் சென்று தனது வாகனத்தை இழந்து விட்டேன். எனவே என்னை ஒரு வாகனத்தில் ஏற்றிச்செல்லுங்கள், அல்லது நான் சென்றடைவதற்கான ஒரு வாகனத்தை தாருங்கள் என்று கேட்க, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தன்னிடம் அவரை ஏற்றிச்செல்வதற்குரிய வாகனம் எதுவும் கிடையாது என விளக்கம் கூறினார்கள். அவ்வேளை அந்த இடத்தில் ஆஜராகி இருந்த ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே!அவரை ஏற்றிச்செல்லக்க கூடிய ஒருவரை நான் காண்பித்துக் கொடுக்கிறேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தேவையுடையவரை தர்மம் வழங்கக் கூடியவருக்கு காட்டிக் கொடுத்தமைக்காக தர்மம் வழங்கியவரின் கூலியில் பங்காளியாக உள்ளார் எனத் தெரிவித்தார்கள்.