இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு மனிதர் குறித்துக் குறிப்பிடுகிறார். அவர் மனிதர்களுக்கு கடன் கொடுப்பதன் மூலம் அல்லது தவணை அடிப்படையில் வியாபாரம் செய்வதன் மூலம் நல்ல முறையில் நடந்து கொள்ளக் கூடியவராக இருந்தார். மனிதர்களிடமிருந்து கடனை மீளப் பெற்றெடுக்கும் தனது பணியாளனுக்கு அம்மனிதர் பின்வருமாறு கூறிக்கொண்டிருந்தார் : நீ கடனாளியிடம் சென்று அவர் உம்மிடம், கடனை நிறைவேற்ற தன்னிடம் ஒன்றுமில்லை என்று கூறினால் அவனுக்கு தவணை கொடுப்பதன் மூலம், அல்லது வற்புறுத்தி கேட்காமல் விடுவதன் மூலம் அவனை மன்னித்துவிடுவாயாக.' அல்லது சிறிது குறைவாக இருந்தாலும் கடனாளியிடம் உள்ளதை பெற்றுக் கொள்வதன் மூலம் விட்டுக் கொடுப்பதாகும்.இவ்வாறு இலகு படுத்தி நடந்து கொள்வதற்கான காரணம்; அல்லாஹ்வும் பாவங்களை மன்னித்து விடுவான் என்ற ஆவல் மற்றும் எதிர்ப்பார்பினாலுமாகும். அவர் மரணித்ததும் அல்லாஹ் அவரின் தவறுகளைப் பொருந்தி அவரை மன்னித்துவிட்டான்.