நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அல் மிக்தாம் இப்னு மஃதீ கர்ப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : 'தனது சகோதரனை (அல்லாஹ்வுக்காக)ஒருவர் நேசித்தால் அவரிடம் தான் அவனை நேசிப்பதை அறிவிக்கட்டும்'. சரியானது - இமாம்களான அபூ தாவூத், திர்மிதி, குப்ரா எனும் நூலில் நஸாஈ, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்
explain-icon

விளக்கம்

முஃமின்களுக்கு மத்தியில் தொடர்பை –உறவை- வலுப்படுத்தி அன்பையும் நேசத்தையும் பரப்பும்; வழிமுறையொன்றை இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெளிவுபடுத்துகிறார்கள்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • உலக நலனுக்காக அல்லாது அல்லாஹ்வுக்காக மாத்திரம் தூய்மையான நேசம் கொள்வதின் சிறப்பு குறிப்பிடப்பட்டிருத்தல்.
  • அன்பும் நேசமும் மேலும் அதிகரிக்க அல்லாஹ்வுக்காக நேசிக்கப்பட்டவரிடம் தனது நேசத்தை, நேசிப்பவர் வெளிப்படுத்துவது விரும்பத்தக்கதாகும்.
  • ஈமானிய சகோதரத்துவத்தை முஃமின்களுக்கு மத்தியில் வலுப்படுத்துவதானது அன்பை பரப்பவும், சமூகத்தை சிதைவு மற்றும் பிரிவினை போன்றனவற்றை விட்டும் பாதுகாக்கவும் செய்யும்.
explain-icon

மேலதிக விபரங்களுக்கு