உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் இறுதி பத்துத் தினங்களிலும் ஏனைய தினங்களில் இல்லாத அளவு முயற்சிப்பார்கள். சரியானது - இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
explain-icon

விளக்கம்

ரமழானின் இறுதிப் பத்துத் தினங்களும் வந்து விட்டால், ஏனைய காலங்களை விட, வணக்க வழிபாடுகளில் அதிக முயற்சியுடன், ஈடுபட்டு, பல்வேறுபட்ட நன்மைகளைக் கூடுதலாகச் செய்வார்கள். அவ்விரவுகள் மகத்தான சிறப்புடையவாக இருப்பதோடு, லைலதுல் கத்ரையும் தேடுவதே அதன் காரணமாகும்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • பொதுவாக ரமழான் முழுதும், குறிப்பாக இறுதிப் பத்திலும் நிறைய நன்மைகளையும், வணக்க வழிபாடுகளையும் செய்யத் தூண்டல்.
  • ரமழானின் இறுதிப் பத்து இருபத்தியோராம் இரவு தொடக்கம், மாதம் முடியும் வரையாகும்.
  • சிறப்பான நேரங்களை வணக்கவழிபாடுகளில் கழிப்பது நல்லது.
explain-icon

மேலதிக விபரங்களுக்கு