ரமழானில் இறுதிப்பத்தில் வரக்கூடிய லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்குவதின் சிறப்பு குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிரஸ்தாபித்துள்ளார்கள். அவ்விரவில் தொழுகை பிரார்த்தனை அல்குர்ஆன் பாராயணம்,திக்ர் போன்ற விடயங்களில் யார் தன்னை ஈடுபடுத்தி,அவ்விரவையும் அது பற்றி இடம்பெற்றுள்ள சிறப்புகளையும் நம்பிக்கை கொண்டு, நற்கருமங்கள் செய்வதன் மூலம் அல்லாஹ்வின் நன்மையை எதிர்பார்த்து, முகஸ்துதியோ பிறருக்கு காட்டும் நோக்மோ இன்றி அவ்விரவில் நின்று வணங்கினால் அவரின்; முன் செய்த அனைத்து சிறு பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன.