ரமழானில் இறுதிப்பத்துகளில் நற்செயல்களை அதிகம் செய்வதன் மூலம் லைலத்துல் கத்ர் இரவை அடைந்து கொள்வதற்கு பாடுபடுமாறும் சிறப்பு கவனம் செலுத்துமாறு நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் மக்களை ஊக்குவித்துள்ளார்கள். இந்த இரவு ஒவ்வொரு ஆண்டும் ரமழானின் கடைசி பத்து நாட்களில் 21, 23, 25, 27 மற்றும் 29 போன்ற ஒற்றைப் படையான இரவுகளில் வருவதற்கான வாய்ப்பு மிகவும் உள்ளது.