ராதிபான ஸுன்னத் தொழுகைள் என்றழைக்கப்படும் -பர்ழான தொழுகைகளுக்கு முன் அல்லது பின் தொழப்படும் தொழுகை- பத்து ரக்அத்துக்களை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து நினைவில் வைத்துக்கொண்டதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் தெளிவுபடுத்துகிறாரகள். அவைகள் பின்வருமாறு: லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்துக்கள், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள், மஃரிபுக்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்துகள், இஷாவிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்துகள், ஸுப்ஹுத்தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்துக்கள், ஆக இவைகள்; பத்து ரக்அத்துக்களாகும். ஜும்ஆத் தொழுகைக்குப்பின் இரண்டு ரக்கஅத்துக்கள் தொழுவார்கள்.