ஹதீஸ் விளக்கம்:ரஸூல் (ஸல்) அவர்கள் ஒரு முறை இரவுத் தொழுகை தொழுத போது அவர்களுடன் ஹுதைபா (ரழி) அவர்களும் தொழுதார்கள்.அவ்வமயம் நபியவர்கள் தொழுகையை நீட்டித் தொழுதார்கள்.அவ்வமயம் ஒரு ரகஅத்தில் அல்பகரா,அந்நிஸாஉ,ஆல இம்ரான் ஆகிய ஸூராக்களை ஓதினார்கள்.மேலும் அவர்கள் ஓதிக் கொண்டு இருக்கும் போது அதனிடையே அல்லாஹ்வைத் துதி செய்து அவனைத் தூய்மைப் படுத்தும் வசனங்களைத் தாண்டும் போது தஸ்பீஹ் செய்தார்கள்.மேலும் அல்லாஹ்விடம் கையேந்தும் படியான வசனங்களைத் தாண்டும் போது அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.இன்னும் பாதுகாப்புத் தேடும் படியான வசனங்களைத் தாண்டும் போது அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடினார்கள்.மேலும் நபியவர்களின் தொழுகை எல்லாக் கட்டத்திலும் அதன் நீளம் ஏரத்தாழ ஒரே மாதிரியாக இருந்தது.எனவே அவர்களின் ருகூஃ அவர்களின் நிலையில் நின்றது போன்றும்,ஸுஜூத் ருகூவில் தாமதித்திருந்தது போன்றும் இருந்தது நீளமாக இருந்தது.