நபி (ஸல்) அவர்கள், சில ஜாஹிலிய்யாக் கால செயற்களை எச்சரித்துத் தடுக்கின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள் : முதலாவது : கன்னத்தில் அறைந்துகொள்பவர்கள் எங்களைச் சார்ந்தவர்கள் அல்ல. கன்னத்தைக் குறித்துச் சொல்வதற்கான காரணம், பெரும்பாலும் அவ்வாறு நடப்பதால் தான். எனவே, முகத்தின் ஏனைய பகுதிகளும் இந்தத் தடையினுள் நுழையும். இரண்டாவது : ஆடையின் திறக்கப்படும் பகுதியைக் கிழித்து, பொறுமையின்மையின் உச்சகட்டமாகத் தமது தலையை அதில் நுழைத்துக் கொள்பவர்கள். மூன்றாவது : ஜாஹிலிய்யாக் கால வார்த்தைப் பிரயோகங்களாகிய, கேடு உண்டாகட்டும், அழிவு உண்டாகட்டும் என்று பிரார்த்தித்தல், ஒப்பாரி வைத்தல், புலம்புதல் போன்றவற்றைச் செய்தல்.