ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அவர்களின் பண்பாடு குறித்து வினவப்பட்டபோது அவர்கள் மிகவும் சுருக்கமானதும் பொருட்செரிவுமிக்கதுமான ஒரு பதிலளித்தார்கள். கேள்வி கேட்டவரை எல்லா முழுமையான பண்புகளையும் நிறைவாகக் கொண்ட அல்குர்ஆனின் பக்கம் அவரின் அவதானத்தைத் திருப்பியதோடு, நபியவர்கள் அல்குர்ஆன் குறிப்பிடும் பண்பாடுகளை கடைப்பிடித்து ஒழுகினார்கள் எனப் பதிலளித்தார்கள். அதாவது அல்குர்ஆன் ஏவியவற்றை நிறைவேற்றினார்கள். அல்குர்ஆன் தடுத்தவற்றை தவிர்ந்திருந்தார்கள். அவர்களின் பண்பாடு அல்குர்ஆன் குறிப்பிடுபவற்றை நடைமுறைப்படுத்துவதும், அதன் வரையறைகளைப் பேணி நடப்பதும், அது கூறும் நற்பண்புகளை கடைப்பிடித்து ஒழுகுவதும், அது (அல்குர்ஆன்) கூறும் கதைகள் மற்றும் உதாரணங்களினால் படிப்பினை பெறுவதும் அவர்களின் பண்பாடாக இருந்தது.