நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இழிவும் நாசமும் உண்டகாட்டும் எனப் பிரார்தித்தார்கள். அதாவது தனது மூக்கை மன்னில் தேய்த்துக்கொள்ளும் நிலைக்கு ஒப்பாக குறிப்பிட்டு மூன்று தடவைகள் அவன் மண்ணை கவ்வட்டும் எனப் பிரார்த்தித்தார்கள். அப்போது தோழர்கள் அவர்களிடம் நீங்கள் நாசமுண்டாகட்டும் எனப் பிரார்தனை செய்த அந்நபர் யார்? எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் எவனோருவன் தனது பெற்றோர்களில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ வயோதிபத்தில் அடையப்பெற்று அவர்களுக்கு உபகாரம் செய்யாது, நோவினை செய்தன் காரணமாக அவர்களின் மூலம் சுவர்க்கம் செல்லாதவர் எனக் குறிப்பிட்டார்கள்.