இங்கு நபியவர்கள், உபகாரம் புரிவதற்கும், நல்ல முறையில் நடந்துகொள்வதற்கும், அழகாக இணைந்து நடப்பதற்கும், சேர்ந்துநடப்பதற்கும் மனிதர்களிலேயே மிகப் பொருத்தமானவர், தாய் தான் என்று தெளிவுபடுத்துகின்றார்கள். ஏனையோரை விடத் தாயாருக்கு இருக்கும் உரிமையை உறுதிப்படுத்தும் விதத்தில் மூன்று தடவை அதனைக் கூறி, விதிவிலக்கின்றி ஏனைய அனைத்து மனிதர்களையும் விட அவரது சிறப்பைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். பின்பு நபியவர்கள், அவரை அடுத்து உபகாரம் செய்யப்படுவதற்குத் தகுதியானவர் தந்தை என்றும், பின்பு அடுத்து நெருக்கமாக உள்ள உறவினர்கள் என்றும் தெளிவுபடுத்துகின்றார்கள். நெருக்கமாக உள்ள உறவினர்கள், தூரமாக உள்ள உறவினர்களை விட, சேர்ந்து நடக்கத் தகுதியானவர்களாகும்.