இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு முஃமினின் விவகாரம் மற்றும் நிலைமைகள் குறிந்து ஆச்சரியப்படுகிறார்கள். ஏனென்றால் அவனுடைய எல்லா சூழ்நிலைகளும் நன்மையாகவே உள்ளன. அதே வேளை விசுவாசிகளைத் (முஃமினைத்) தவிர வேறு யாருக்கும் இது கிடைப்பதில்லை. அவனுக்கு மகிழ்சியான – மங்கலகரமான ஒரு விடயம் நிகழ்ந்தால் அதற்காக அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான், ஆகவே அவன் நன்றி செலுத்தியமைக்கான கூலியை அவன் அடைந்து கொள்கிறான் -பெற்றுக் கொள்கிறான். அவனுக்கு தீங்கான –துன்பகரமான – விடயம் ஏற்பட்டால் அவன் அதற்காக பொறுமை காத்து அதற்காக அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்க்கிறான். இந்த வகையில் அவனும் தனது பொறுமைக்காக கூலியை பெற்றுக்கொள்வதோடு, ஏற்பட்ட துன்பம் நீங்கும் வரையில் அவன் கடந்து போகும் சகல நிலைகளிலும் அவனுக்கு கூலி கிடைக்கிறது.