இங்கு நபியவர்கள் எச்சரிப்பதாவது, யாராவது ஒருவர் வேண்டுமென்றே தன் உயிரை மாய்த்துக் கொண்டால், அவர், அதற்கேற்ற கூலியாக, மறுமை நாளில் நரகநெருப்பில், இவ்வுலகில் எவ்வாறு தன்னை மாய்த்துக்கொண்டாரோ, அதே விதத்தில் தண்டிக்கப்படுவார். எனவே, யார் ஒரு மலையில் இருந்து விழுந்து தன்னை மாய்த்துக் கொள்கின்றாரோ, அவர் மறுமையின் நரகத்தின் மலைகளில் இருந்து அதன் பள்ளத்தாக்குகளை நோக்கி நிரந்தரமாக விழுந்துகொண்டே இருப்பார். யார் நஞ்சை அருந்தி, தனது உயிரை மாய்த்துக் கொள்கின்றாரோ, அவரது நஞ்சு கையில் இருக்க, நரக நெருப்பில் அதை அறுந்திக்கொண்டே என்றென்றும் நிரந்தரமாகவே அதில் தங்கியிருப்பார். யார் கூரிய ஓர் ஆயுதம் கொண்டு தன் வயிற்றில் குத்தி, உயிரை மாய்த்துக் கொள்கின்றாரோ, அவர், தனது கூரிய ஆயுதத்தால் தனது வயிற்றில் குத்திக் கொண்டிருக்கும் நிலையிலேயே, நரகநெருப்பில் என்றறென்றும் நிரந்தரமாகத் தங்கியிருப்பார்.