இங்கு நபியவர்கள், சிறிய பாவங்களில் கவனயீனமாக ஈடுபடுவதையும், அவற்றை அதிகமாகச் செய்வதையும் எச்சரிக்கின்றார்கள். ஏனெனில், அவை ஒன்றிணைந்து அவனை அழித்து விடுகின்றன. அதற்கு உதாரணமாவது, ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் இறங்கிய ஒரு கூட்டத்தினரைப் போன்றதாகும். ஒவ்வொருவரும் ஒரு குச்சியைக் கொண்டு வந்தனர். இவ்வாறே அவர்கள், தாம் சேர்த்த குச்சிகளைக் கொண்டு தமது ரொட்டியை வேகவைத்து விட்டார்கள். அற்பமாகக் கருதப்படும் பாவங்களை செய்பவர், அவர் தௌபா செய்யாத நிலையிலும், அவரை அல்லாஹ் மன்னிக்காத நிலையிலும், அவற்றைக் கொண்டு எப்போதாவது பிடிக்கப்பட்டால், அவரை அவை அழித்தே விடும்.