சட்டதிட்டங்கள்,வணக்கவழிபாடுகள்; மற்றும் நியாயமான காரணம் நிமித்தம் அதாவது பிரயாணத்தின் போது தொழுகையை சுருக்கியும் சேர்த்தும் தொழுதல், போன்ற அல்லாஹ்வால் அனுமதியளிக்கப்ட்ட சலுகைகளைப் பயன்படுத்துவதை அல்லாஹ் விரும்புகிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். கடமையான விடயங்களை செய்வதை அவன் விரும்புவது போன்று சலுகைகளாகத் தரப்பட்டவைகளையும் நிறைவேற்றுவதை விரும்புகிறான் ஏனெனில் கட்டாயமாக செய்யவேண்டும், என்ற அல்லாஹ்வின் கட்டளையும் அவனால் அளிக்கப்பட்ட சலுகைகளும் ஒன்றாகும்.