தனக்குத் தரவேண்டிய கடனைத் தராமல் ஒழிந்து கொண்டிருந்த ஒரு மனிதரை அபூ கதாதா அவர்கள் தேடிக்கொண்டிருக்கும் போது அவரைக் கண்டு கொண்டார்கள். அப்போது அம்மனிதர், 'நான் கஷ்டவாளி, கடனைத் திரும்பத் தருவதற்கான பணம் என்னிடம் இல்லை' எனக் கூறினார். தன்னிடம் பணம் இல்லை எனச் சத்தியம் செய்யும் படி அவரிடம் கேட்டார்கள். அவரும், தான் கூறுவது உண்மையே எனச் சத்தியம் செய்தார். அப்போது அபூ கதாதா அவர்கள், நபியவர்கள் கூறியதைத் தான் கேட்டதாக இவ்வாறு கூறினார்கள்: மறுமையின் துன்பங்கள், சிரமங்கள் மற்றும் பயங்கரங்களில் இருந்து பாதுகாக்கப்பட யார் விரும்புகின்றாரோ, அவர் சிரமத்தில் உள்ள ஒரு கடனாளியின் கடனுக்குத் தவணையை நீடித்துக் கொடுத்தோ, அல்லது கடனை பகுதியாகவோ, முழுமையாகவோ தள்ளுபடி செய்தோ இலகுபடுத்திக் கொடுக்கட்டும்.