நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'அயலவரும் வாரிசுதாரராக ஆகி விடுவாரோ என நான் எண்ணுமளவிற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அயலவர் -அண்டைவீட்டார் குறித்து எனக்கு உபதேசித்துக் கொண்டே இருந்தார்கள்'. சரியானது - இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
explain-icon

விளக்கம்

ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அண்டை வீட்டார் குறித்து கரிசனை செலுத்துமாறு கட்டளைப் பிரப்பித்து, அதனை பற்றி பல முறை தொடர்ந்து தனக்கு கூறியவண்ணம் இருந்தார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெரிவிக்கிறார்கள். அண்டை வீட்டார் என்பவர் எமக்குப் பக்கத்தில் வாழும் முஸ்லிமோ காபிரோ உறவினர்களோ அல்லது உறவினர் அல்லாதாரோ அனைவரையும் குறிக்கும். இவர்களின் உரிமையை காத்து, அவர்களுக்கு தொந்தரவு செய்யாது, அவர்களுக்கு உபகாரம் செய்து, அவர்களால் ஏற்படுகின்ற தொந்தரவுகளை சகித்து நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபியவர்களுக்கு அண்டை வீட்டார் உரிமைப் பற்றியும் அதன் மேன்மையையும் வலியுறுத்திக் கூறியது ஒருவர் தனது மரணத்திற்குப் பின் விட்டுச்செல்லும் சொத்தில் அவருக்கும் பங்கு உண்டு என நினைக்குமளவிற்கு இருந்தாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • அண்டை வீட்டாரின் உரிமையின் மேன்மையும், அதில் கரிசனை செலுத்துவதன் அவசியமும் கடமையும் இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகிறது.
  • உபதேசம் செய்து அவர்களின் உரிமையை வலியுறுத்துவதானது அவர்களை மதித்து, நேசித்து, உபகாரம் புரிதல், ஆபத்துக்களைத் தடுத்தல், நோயாளியாக இருக்கும் போது நலம் விசாரத்தல், மகிழ்வுறும் விடயங்களின் போது வாழ்த்துதல், துன்பங்களின் போது ஆறுதல் கூறுதல் போன்றவற்றின் அவசியத்தை உணர்த்துகின்றது.
  • அயலவரின் வீட்டுவாயிலின் நெருக்கத்திற்கேட்ப அவர்களுக்கு செலுத்தவேண்டிய கடமை மிகவும் வலியுறுத்தப்பட்டதாகும்.
  • மாரக்கம் கொண்டுவந்த சட்டதிட்டங்களின் பூரணத்துவம் இந்த ஹதீஸில் பிரதிபளிப்பதை இங்கு காணமுடிகிறது. அதாவது மார்க்கம் வழங்கியுள்ள சட்டதிட்டங்களில் சமூக நலன் காணப்படுகிறது.