இங்கு நபியவர்கள் மூன்று தடவை சத்தியம் செய்து, உறுதிப்பட. 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஈமான் கொள்ளமாட்டான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஈமான் கொள்ளமாட்டான். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் ஈமான் கொள்ளமாட்டான்.' என்று கூறுகின்றார்கள். அப்போது நபித்தோழர்கள் அவர்களிடம், 'அவன் யார்? அல்லாஹ்வுடைய தூதரே!' எனக் கேட்ட போது, 'எவனுடைய தீமைகளையும், சதியையும், அநியாயத்தையும் விட்டு அண்டைவீட்டான் அபயம் பெறவில்லையோ அவன் தான்' என்று கூறினார்கள்.