அல்லாஹ்வுக்கென உரித்தான விடயங்களில் ஒன்றை பிற ஒன்றின் பால் யார் திருப்பி விடுகிறாறோ அதாவது அல்லாஹ் அல்லாதவரிடத்தில் பிரார்த்தித்தல், அல்லது உதவி கோரி வேண்டுதல் போன்ற விடயங்களை செய்த நிலையில் ஒருவர் மரணிப்பாராயின் அவர் நரக வாதிகளில் ஒருவராக கருதப்படுவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். யார் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காத நிலையில் மரணிக்கிறாரோ அவரின் இறுதி முடிவு சுவர்க்கமாகும் என இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இத்தகவலுடன் மேலதிகமாக குறிப்பிடுகிறார்கள்.