நபி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'தாம் உயிருடன் இருக்கும் போது மறுமையை சந்திப்போரும், சமாதிகளை வழிபாட்டுத் தளங்களாக எடுப்போருமே மக்களில் மிக மோசமானவர்கள்'. நம்பகமானது (ஹஸன்) - இமாம் அஹ்மத் இதனைப் பதிவு செய்திருக்கிறார்
explain-icon

விளக்கம்

தாம் உயிருடன் இருக்கும் போது மறுமையை சந்திப்போரும், சமாதிகளை வழிபாட்டுத்தளங்களாக எடுத்து அதன் பால் தொழுவோருமே மக்களில் மிக மோசமானவர்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • சமாதிகளின் மீது பள்ளிகளைக் கட்டுவது இணைவைப்பிற்கு இட்டுச்செல்லும் வழி என்பதனால் அதன் மீது கட்டுவது ஹராமாக்கப்பட்டிருத்தல்.
  • சமாதிகளை கட்டியோ கட்டாமலோ அங்கு தொழுவது ஹராமாகும், ஏனெனில் கட்டடம் இல்லாவிடினும் ஸுஜுது செய்யப்படும் அனைத்து இடங்களும் பள்ளியாகும்; மஸ்ஜித் என்பது, கட்டடம் இல்லாதிருந்தாலும் ஸுஜூத் செய்யப்படும் இடங்களுக்கு வழங்கப்படும் ஒரு பெயராகும்.
  • நல்லடியார்களின் சமாதிகளை வழிபாட்டுத் தளங்களாக எடுப்பவர்கள் மக்களில் தீயவர்களாவர், அதன் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தை அவர்கள் நாடினாலும் சரியே.
explain-icon

மேலதிக விபரங்களுக்கு