நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸைனப் பின் ஜஹ்ஷ் ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் பயந்து நடுங்கிய நிலையில்; வந்து 'லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறினார்கள்' லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறியது விரும்பத்தகாத ஒரு விடயம் நிகழவிருப்பதை எதிர்பார்த்து கட்டியம் கூறுவதையும், அதிலிருந்து விமோசனம் பெற –தப்பிக்க அல்லாஹ்விடம் புகழிடம் தேடுவதன் மூலம் மாத்திரமே சாத்தியம் ஆகும் என்பதைக் குறிக்கும். பின் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் : நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபியருக்குக் கேடு நேரவிருக்கின்றது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் - அணை- திறக்கப்பட்டுவிட்டது'. இந்த அணை துல்கர்னைன் அவர்கள் கட்டினார்கள். அது கட்டப்பட்டதை விவரிக்கும் முகமாக தம் கட்டை விரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டினார்கள். அதற்கு ஸைனப் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்: எங்களில் ஸாலிஹான முஃமின்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் எம்மீது அழிவை எப்படி ஏற்படுத்துவானா? என்று கேட்டார்கள் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பாவகாரியங்கள் தீயசெயல்கள் மானக்கேடான விடயங்கள் விபச்சாரம் மதூபானம் ஆகியவை அதிகரிக்கும்போது அழிவு பொதுவாக ஏற்படும் என்று குறிப்பிட்டார்கள்.