நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூத்தர்தா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : "கஹ்ஃப் அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்களை யார் மனனம் செய்கிறாரோ அவர் தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு பெறுவார். மற்றொரு அறிவிப்பில் ஸுறா கஹ்பின் இறுதி பத்து வசனங்கள் என்று வந்துள்ளது". சரியானது - இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்
explain-icon

விளக்கம்

நபி ﷺ அவர்கள் அறிவித்தார்கள்: யார் ஸூரத்துல் கஹ்ஃபின் முதல் பத்து ஆயத்துகளை (புரிந்து) மனனம் செய்கிறாரோ, அவர் இறுதிக்காலத்தில் வெளிவந்து தன்னை இறைவன் என்று கூறும் மஸீஹுத் தஜ்ஜாலின் பெரும் சோதனையிலிருந்து பாதுகாக்கப்படுவார். தஜ்ஜாலின் சோதனையானது, ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டது முதல் கியாமத் நாள் ஏற்படும் வரையில் பூமியில் ஏற்பட்ட சோதனைகளை விட மிகப் பெரிய சோதனையாகும். அல்லாஹுத் தஆலா அவனுக்கு சில அசாதாரண நிகழ்வுகள் மூலம் அற்புதங்களை ஏற்படுத்துவதற்கான சக்தியை வழங்குவான்; அவற்றின் மூலம் அவனைப் பின்பற்றுவோரைக் கவர்வான். ஸூரத்துல் கஹ்ஃபின் முதல் பகுதியில் உள்ள அதிசயங்களும் அத்தாட்சிகளும், தஜ்ஜால் மக்களைச் சோதிக்கும் விடயங்களை விட மிக ஆபத்தனாவை. ஆகவே, அவற்றை ஆழமாக சிந்தித்து உணர்ந்தவர் தஜ்ஜாலின் மாயஞாலங்களுக்கு மயங்கிவிடமாட்டார். மற்றொரு அறிவிப்பில்;: ஸூராவின் இறுதி பத்து ஆயத்துகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ஓதினாலும் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து பாதுகாப்புக்கிடைக்கும் அது 'அபஹசிபல்லதீனு கபரூ அய்யத்தகிது.. {أفحسب الذين كفروا أن يتخذوا...} என்று துவங்கும் வசனமாகும்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • இந்த ஹதீஸானது ஸூரத்துல் கஹ்ஃபின் சிறப்பை விளக்குகிறது அதன் தொடக்க ஆயத்துகளோ அல்லது இறுதி ஆயத்துகளோ தஜ்ஜாலின் சோதனையிலிருந்து பாதுகாக்கும்.
  • தஜ்ஜாலின் விவகாரம் குறித்து அறிவுருத்துவதும், அதிலிருந்து பாதுகாப்பதற்கான வழியை தெளிவுபடுத்துவதும்.
  • ஸூரத்துல் கஹ்ஃபை முழுமையாக மனப்பாடம் செய்ய ஊக்குவித்தல், அவ்வாறு முடியாவிட்டால் முதல் பத்து மற்றும் இறுதி பத்து ஆயத்துகளை மனப்பாடம் செய்தல் வேண்டும்.
  • இமாம் குர்துபி ரஹிமஹுல்லாஹ் இதற்கான காரணத்தை விளக்கும்போது கூறுகிறார்: குகைவாசிகளின் சம்பவத்தில் பல அதிசயங்களும் அற்புதங்களும் உள்ளடங்கியுள்ளது. இதனை அறிந்த ஒருவர் தஜ்ஜாலின் விவகாரம் அவருக்கு ஆச்சரியமாகவோ அதிர்ச்சியூட்டவதாகவோ அமையாது. அத்துடன் அதன் கவர்ச்சியால் அல்லுண்டு குழப்பமடையவும் மாட்டார் மேலும், (لينذر بأسًا شديدًا من لدنه) என்ற வசனத்தில் 'கடுமையான தண்டனை' மற்றும் 'அல்லாஹ்விடமிருந்து நேரடியாக வரும்' என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தஜ்ஜால் தன்னை இறைவன் என்று கூறி, அதிகாரம் செலுத்தும், மிகப்பெரிய சோதனையை ஏற்படுத்தும் நிலையாகும். ஆகவே தஜ்ஜாலின் விவகாரம் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைவதால், நபி ﷺ அவர்கள் அதிலிருந்து எச்சரித்ததோடு அதன் சோதனையிலிருந்து பாதுகாப்பை அல்லாஹ்விடம் வேண்டிக் கொண்டார்கள். எனவே, இந்த ஹதீஸின் பொருள்: இந்த ஆயத்துகளை வாசித்து, அவற்றை ஆழமாக சிந்தித்து, அதன் அர்த்தத்தை உணர்ந்தவர் தஜ்ஜாலின் விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்து, அவனுடைய சோதனையிலிருந்து பாதுகாப்பைப் பெறுவார் என்பதாகும்.
explain-icon

மேலதிக விபரங்களுக்கு