நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால், அவர் தமது நோன்பை முழுமைப் படுத்தட்டும்; ஏனெனில், அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான். சரியானது - இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
explain-icon

விளக்கம்

ஒருவர் கடமையான (பர்ழான) அல்லது நப்லான- நோன்பு நோற்று இருக்கும் நிலையில் மறதியாக சாப்பிட்டால் அல்லது ஏதாவது பானத்தை குடித்து விட்டால் அவர் நோன்பை விட்டுவிடாது அதனைப் பூரணப்படுத்தல் வேண்டும்; ஏனெனில் இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவருக்குக்கு கிடைத்த உணவாகும். இந்த வகையில் அல்லாஹ்வே அவருக்கு உணவளித்து குடிக்கக் கொடுத்தான் என நபியவர்கள் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • நோன்பு நோற்ற நிலையில் மறதியாக சாப்பிட்டால் அல்லது ஏதாவது பானத்தை அருந்திவிட்டால் அவரின் நோன்பு செல்லுபடியாகும்.
  • நோன்பின் போது மறதியாக உன்ணுபவர் அல்லது குடிப்பவர் மீது எந்தக் குற்றமுமில்லை. ஏனெனில் இது அவரின் சுயவிருப்பத்திற்கு அப்பால் நிகழ்ந்த விடயமாகும்.
  • இந்த ஹதீஸ் அல்லாஹ் தன் அடியார்களிடம் கொண்டுள்ள கருணையை விவரிப்பதோடு, அவர்களுக்கு மார்க்கச் சட்டங்களை எளிதாக்கி, அவர்களின் கஷ்டங்களையும் சிரமங்களையும் நீக்குகிறான் என்பதை எடுத்து காட்டுகிறது.
  • ஒருவர் தனது நோன்பை முறிக்கும் செயல் ஒன்றைச் செய்தாலும், அவரது நோன்பு முறிவதற்கு மூன்று நிபந்தனைகள் உள்ளன. (1) குறித்த செயலானது தனது நோன்பை முறிக்கும் ஒரு செயல் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும்; அவர் அதை அறியாமல் செய்தால், அவரது நோன்பு முறியாது. (2) அவர் தனது நோன்பை முறிக்கும் ஒரு செயலைச் செய்யும் போது சுயநினைவுடன் செய்ய வேண்டும்; அவர் அதை மறதியால் செய்தால், அவரது நோன்பு முறியாது. அவர் அந்த நோன்பை மீண்டும் நிறைவேற்ற வேண்டியதில்லை. (3) அவர் அதை சுயவிருப்பத்துடன் செய்திருத்தல் வேண்டும்; யாராவது அவரை நோன்பை முறிக்கும் ஒன்றைச் செய்ய வற்புறுத்தினால், அவரது நோன்பு முறியாது.
explain-icon

பிரிவுகள்

explain-icon

மேலதிக விபரங்களுக்கு