'நபிஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்ற நாடினால் தனது இரு கைகளையும் முதலில் கழுபவர்களாக இருந்தார்கள். பின்னர்; தொழுகைக்கு வுழூச் செய்வது போல் வுழூச் செய்வார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள் பின்னர் தனது தலைமுடியின் அடிப்பாகத் தோல் நனையும் வரை இரு கைகளினாலும் கோதுவார்கள். பின்னர் தலையின் மீது மூன்று முறை நீரை ஊற்றிவிட்டு பின்னர் உடலின் எஞ்சிய எல்லாப் பகுதிகளையும் கழுவுவார்கள். நானும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளிப்போம். நாங்கள் இருவரும் சேர்ந்து பாத்திரத்திலிருந்து தண்ணீரை அள்ளுவோம்' என ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்.