தூக்கத்தில் வரும் மகிழ்ச்சியூட்டும் நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்து வருவதாகவும், வெறுப்பையும், கவலையையும் ஏற்படுத்தும் கெட்டகனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவதாகவும் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். யாராவது பயங்கரமான வெறுப்பான ஒரு கனவைக் கண்டால், தனது இடப்பக்கம் உமிழ்ந்து விட்டு, அதன் தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்கட்டும். அப்போது அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தமட்டாது. ஏனெனில் மேலே கூறப்பட்ட அம்சங்களை, அக்கனவின் விளைவாக ஏற்பட வாய்ப்புள்ள பாதிப்பக்களை விட்டும் காப்பவையாக ஆக்கியுள்ளான்.