நிச்சயமாக அல்லாஹ்விடம் மனிதன் சொல்லும் பொய்யில் மிகக்கொடியது யாதெனில்,அவன் தன் பரம்பரையைத் தனது தந்தையல்லாத வேரொருவனின் பக்கம் சாட்டிவிடுவது.அல்லது வேறு எவரேனும் அவனுடைய தந்தையல்லாதவனை அவனுடைய தந்தை என்று சாட்டினால் அதனை அவன் அங்கீகரித்தலாகும். மேலும் மனிதன் தான் காணாத ஒன்றைக் கனவில் கண்டதாகச் சொல்வதும் அவ்வாறே ரஸூல் (ஸல்) சொல்லாத,செய்யாத, அனுமதிக்காத எதனையும் அவர்களின் பக்கம் சாட்டி விடுவதும் அல்லாஹ்விடம் பெரும் பொய்யாகக் கருதப்படும்.