வட்டி ஏற்பட வாய்ப்புள்ள பொருட்களான, தங்கம், வெள்ளி, கோதுமை, வாற்கோதுமை, ஈத்தம்பழம், உப்பு ஆகியவற்றில் எவ்வாறு விற்பனை செய்ய வேண்டும் என்பதை நபியவர்கள் இங்கு தெளிவு படுத்துகின்றார்கள். தங்கத்திற்குத் தங்கம், வெள்ளிக்கு வெள்ளி போன்று, ஒரே இனத்தில் விற்பனை செய்வதாக இருந்தால் பின்வரும் இரு நிபந்தனைகள் அவசியமாகும் : முதலாவது : தங்கம் மற்றும் வெள்ளி போன்று நிறுக்கப்படுபவையாக இருந்தால், நிறையில் சமனாக இருத்தல், கோதுமை, வாற்கோதுமை, ஈத்தாம்பழம் மற்றும் உப்பு போன்று, அளக்கப் படுபவையாக இருந்தால், அளவையில் சமமாக இருக்க வேண்டும். இரண்டாவது : வியாபாரம் நடக்கும் அதே இடத்தில், விற்பவர் பெறுமதியையும், வாங்குபவர் பொருளையும் கையகப்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கத்தை வெள்ளிக்கோ, ஈச்சம்பழத்தை கோதுமைக்கோ விற்பது போன்று இந்த இனங்கள் வேறுபட்டால், (இந்நிலையில்) ஒரு நிபந்தனையுடன் வியாபாரம் செய்யலாம். அதாவது, வியாபாரி பெறுமதியையும், வாங்குபவர் பொருளையும் வியாபாரம் நடைபெறும் இடத்தில் கையகப் படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லா விட்டால், அவர்கள் தடுக்கப்பட்ட வட்டியில் வீழ்ந்து விடுவார்கள். அதில் விற்பவரும், வாங்குபவரும் சமமாகும்.