அந்நியப் பெண்களுடன் கலந்து இருப்பதைத் தடுக்கும் விதமாக நபியவர்கள், 'நீங்கள் பெண்கள் இருக்கும் இடத்தில் நுழையாமலும், பெண்கள் நீங்கள் இருக்கும் இடத்தில் நுழையாமலும் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்' என்று கூறினார்கள். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர், 'கணவனின் உறவுகளில், ஒரு வேளை இப்பெண் திருமணம் முடிக்காமல் இருந்திருந்தால், திருமணம் செய்வதற்கான அனுமதியுள்ள, கணவனின் சகோதரன், அவரது சகோதரனின் மகன், அவருடைய சிறிய தந்தை, சிறிய தந்தையின் மகன், அவரது சகோதரியின் மகன் போன்றோர் பற்றி என்ன சொல்கின்றறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், 'மரணத்தை எச்சரிக்கையாக இருப்பது போன்று, அவர்களை எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். ஏனெனில், கணவனின் உறவுகளோடு தனிமையில் இருப்பதென்பது, குழப்பம் மற்றும் மார்க்கத்தில் அழிவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, கணவனின் பெற்றோர் மற்றும் பிள்ளைகள் அல்லாத உறவுகள் ஏனைய அன்னிய ஆண்களை விடத் தடுக்கப்பட வேண்டியவர்கள். ஏனெனில், அன்னிய ஆண்களுடன் தனிப்பதை விட, கணவனின் உறவுகளுடன் தனிப்பதே அதிகமாக நிகழ்கின்றது. ஏனையோரை விட, அவர்களாலே தீங்குகள் நடக்க வாய்ப்புள்ளது. குழப்பங்கள் அவர்களால் நடப்பதே அதிக வாய்ப்பானது. ஏனெனில், எந்தவொரு எதிர்ப்பும் இன்றி அவர்களால் பெண்ணை அடையவும், தனிமையில் இருக்கவும் முடியும். அவ்வாறு தனிப்பது சிலவேளை தவிர்க்கமுடியாமல் கட்டாயமாகவும் நடக்கும். ஏனெனில், அதில் சற்றுக்கவனயீனம் உள்ளது. எனவே தான் பெண்கள் தனது கணவனின் சகோதரர்களோடு தனித்து விடுகின்றார்கள். அதனால், இதன் அறுவறுப்பு நிலை மற்றும் பாதிப்புக்கள் காரணமாக, இது மரணத்தை ஒத்ததாக உள்ளது. ஆனால், அன்னிய ஆணின் விடயம் அவ்வாறல்ல. அவனது விடயத்தில் எச்சரிக்கையாவே இருந்துகொள்வர்.