பாதிமா பின் அபூ ஹுபைஷ் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து: 'தனக்கு தொடராக இரத்தம் வெளியேறுவது நிற்கவில்லை, அது மாதவிடாய் காலப்பகுதியையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது, எனவே மாதவிடாய் சட்டத்தைப் பின்பற்றி தொழுகையை விட்டுவிடலாமா?' எனக் கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்: 'அது தொடர் உதிரப்போக்கு, கருப்பையில் உள்ள நரம்பின் துண்டிப்பினால் ஏற்படுகின்ற நோய் நிலை இரத்தமாகும். அது மாதவிடாயல்ல எனப் பதிலளித்தார்கள் ஆகவே இஸ்திஹாழா வரமுன் உமக்கு வழமையில் மாதாந்தம் ஏற்படுகின்ற மாதவிடாய் காலப்பகுதியை நீ அடையும் நேரத்தில் அக்காலப்பகுதியில் மாத்திரம் தொழுகை மற்றும் நோன்பு போன்றவற்றை விட்டுவிடுவீராக, இது மாதவிடாய் காலப்பகுதியில் பின்பற்ற வேண்டிய விடயங்களாகும். வழமையான மாதவிடாய் நாட்கள் -காலப்பகுதி- முடிவடைந்ததுவிட்டால், நீ மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்துவிட்டாய், ஆதலால் இரத்தம் இருக்குமிடத்தை நன்கு கழுவிவிட்டு பின்னர் தொடக்கை நீக்குவதற்காக முழுமையாக உடலை கழுவி குளித்து கொண்டு பின் தொழுவீராக என்று குறிப்பிட்டார்கள்.