அல்லாஹுதஆலா இரவின் கடைசி மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது கீழ்வானிற்கு (அவனது கண்ணியத்திற்கு ஏற்றவாறு) இறங்கி, தனது அடியார்களை தன்னிடம் பிரார்த்திக்குமாறும் அதற்கு அவன் பதிலளிப்பதாகவும் ஆர்வமூட்டுகிறான். மேலும் அவர்கள் விரும்பியதை தன்னிடம் கேட்குமாறும் அவ்வாறு தன்னிடம் கேட்போருக்கு வழங்குவதாகவும் அவன் தூண்டுகிறான். மேலும்; தங்களது பாவங்களுக்கு தன்னிடம் பாவமன்னிப்புக்கோருமாறும் அவ்வாறு மன்னிப்புக்கோரும் முஃமினான அடியார்களை மன்னிப்பதாகவும் அவன் அழைப்பு விடுப்பதாகவும் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்து கிறார்கள்.