நபி ﷺ அவர்களின் மனைவிகளின் வீடுகளுக்கு சில ஸஹாபாக்கள் (ரழியல்லாஹீ அன்ஹும்) வந்தார்கள். அவர்கள், நபி ﷺ அவர்கள் வீட்டுக்குள் தனிப்பட்ட நிலையில் செய்யும் இபாதத்துகளைப் பற்றி விசாரித்தார்கள். அதைப் பற்றி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டபோது, அவற்றை தாங்கள் செய்யும் இபாத்துக்களுடன் ஒப்பிட்டு தாங்கள் செய்வது மிகவும் குறைவானது எனக் கருதினார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: 'நாம் எம்மை நபி ﷺ அவர்களுடன் ஒப்பிடும் போது மிகவும் தூரத்தில் இருக்கிறோம். நபியவர்களின் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன. அவ்வாறிருந்தும்அவர்கள் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் எம்மைப் பொறுத்தவரை எமக்கு மன்னிப்பு கிடைத்ததா இல்லையா என்பது தெரியாது ஆகையால் நாம் அதிகமாக இபாதத் செய்ய வேண்டியதுதான், அதன் மூலம் மன்னிப்பு கிடைக்கலாம் எனக் கூறினார்கள்'. பின்னர் அவர்களில் ஒருவர்: 'நான் பெண்களை மணக்கமாட்டேன்' என்று கூறினார். இன்னொருவர், ''நான் ஒரு போதும் இறைச்சி சாப்பிடமாட்டேன் ' என்று கூறினார். மற்றொருவர்; நான் படுக்கையில் தூங்க மாட்டேன் என்று கூறினார். இந்த விஷயம் நபி ﷺ அவர்களுக்கு எட்டியது. அவர் கோபமடைந்து மக்களிடம் உரையாற்றினார். அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனுக்குத் துதி செலுத்திய பின் அவர்கள் கூறினார்கள்: என்ன காரணம், சிலர் இப்படியும் அப்படியும் பேசுகிறார்கள்?! அல்லாஹ்வின் மீது உங்களைவிட அதிக பயம் கொண்டவனும், அதிக தக்வா உடையவனும் நான்தான். ஆனால் நான் இரவில் தூங்குகிறேன்—இரவு தொழுகைக்காக சக்தி பெறுவதற்குநான் நோன்பை விடுகிறேன்—நோன்புக்காக வலிமை பெறுவதற்கு நான் பெண்களை மணக்கிறேன். எவன் என் வழிமுறையிலிருந்து விலகி, அதற்குப் பிறகு வேறு ஒன்றில் முழுமை இருக்கிறது என்று கருதி, என் வழியை விட்டுவிட்டு வேறு வழியைப் பின்பற்றுகிறானோ—அவன் என்னைச் சார்ந்தவன் அல்லன்'.