ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அஸ்ஸலாமு அலைகும்' என்று கூறினார். நபியவர்கள் அதற்கு பதில் அளித்ததும் அவர் அமர்ந்து விட்டார். அப்போது நபியவர்கள், 'பத்து நன்மைகள் அவருக்கு எழுதப்பட்டுவிட்டன' என்று கூறினார்கள். பின்னர் ஒரு மனிதர் வந்து, 'அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹ்' என்று கூறினார். நபியவர்கள் அதற்கும் பதில் அளித்ததும் அவரும் அமர்ந்து விட்டார். அப்போது நபியவர்கள், 'அவருக்கு இருபது நன்மைகள்' என்று கூறினார்கள். பின்னர் ஒரு மனிதர் வந்து, 'அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ' என்று கூறினார். நபியவர்கள் அதற்கும் பதில் அளித்ததும் அவரும் அமர்ந்து விட்டார். அப்போது நபியவர்கள், 'அவருக்கு முப்பது நன்மைகள்' என்று கூறினார்கள். அதாவது ஒவ்வொரு சொல்லுக்கும் பத்து நன்மைகள் உண்டு.