இங்கு நபியவர்கள், எமக்கு முன்னர் வாழ்ந்த ஒரு சமுதாயத்தில் இருந்த ஒரு மனிதருக்கு ஒரு காயம் ஏற்பட்டபோது, அதன் வலியைப் பொறுக்க முடியாது, ஒரு கத்தியை எடுத்து, தன் கையை வெட்டி, மரணத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதாவது, இரத்தம் வழிந்தோடி, அவர் மரணித்து விட்டார் எனவும், அப்போது அல்லாஹ், 'என்னுடைய அடியான் என்னிடம் அவசரப்பட்டு வந்துவிட்டான். அவன் மீது நான் சுவனத்தை ஹராமாக்கி விடுகின்றேன்.' என்றும் கூறியதாக அறிவிக்கின்றார்கள்.