இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உண்மை பேசுமாறு வலியுறுத்துகிறார்கள். அவ்வாறு உண்மை பேசுவதை கடைப்பிடிப்பதும் நிலையான நற்காரியங்களை செய்யவும் நற்செயல்களை தொடராக செய்யவும் வழிவகுப்பதோடு அவரை சுவர்கத்தின் பால் கொண்டு போய்சேர்க்கும். இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தொடராக இப்பண்பை கடைப்பிடிப்பவர் உண்மையாளர் என்ற பெயருக்கு தகுதிபெற்றவராக மாறி விடுகிறார். அரபு மொழியில் சித்தீக் என்பது மிகப்பெரும் உண்மையாளர் என்ற கருத்தைக் காட்டும் ஒரு சொல்லாகும். மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பொய் மற்றும் வீணாண வார்த்தை பேசுவதை விட்டும் எச்சரிக்கை செய்தார்கள். ஏனெனில் இச்செயற்பாடானது மார்க்கத்தில் உறுதியாக இருப்பதை விட்டு தடம்புரள தூண்டுவதோடு தீமைகளையும் பாவங்களையும் குழப்பங்களை செய்யயவும் வழிவகுக்கும். பின் இவை நரகத்திற்கு கொண்டுபோய் சேர்த்துவிடும். ஒருவர் தொடர்ந்தும் அதிகமாக பொய் சொல்பவராக இருக்கும் பட்சத்தில் அவர் பொய்யர் என அல்லாஹ்விடத்தில் பதிவு செய்யப்படுகிறார்.